கடவுள் இல்லை என

கடவுள் இல்லை என யார் சொன்னார்
என் குழந்தையை பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

எனக்குள் கருவாகி உருவாகி
உயிராகி உடல் எடுத்து
பிறந்த ஒரு சிறு உருவம்
அவனைப் பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

என் முன் வளரும் அவன் கைகள் என்னிடம் ஓடிவரும் அவன் பிஞ்சு கால்கள் பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

என்னை அணைத்து தூங்கும் என் குழந்தையை பார்க்கையில் மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

அம்மா! என்று என்னை அவன் அழைக்கும் நிமிடங்களில்
மறுக்காமல் உணர்கிறேன்
அந்தக் கடவுளின் இருப்பை.....

எழுதியவர் : காமாக்ஷி வெங்கட் (23-Aug-16, 12:18 pm)
சேர்த்தது : காமாக்ஷி வெங்கட்
Tanglish : kadavul illai ena
பார்வை : 279

மேலே