மனதின் நினைவுகள்

மேக கூட்டங்கள் விலக ஆரம்பித்தது...
என் விழி...
அவள் கருங்கூந்தலைக் காணும் என்ற நம்பிக்கையில்....
வெண் பனித்துளி விலக ஆரம்பித்தது...
என் விழி....
அவள் புன்னகை முகத்தை காணும் என்ற நம்பிக்கையில்.....
பேருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தது....
மனதின் வேகம் அதிகரிக்க ஆரமபித்தது...
கல்லூரி விழாவாம்....
என்றும்செல்லும் நேரத்திற்கு முன்பாக அவள்
செல்வாளா ?
என்று மனம் படப்படக்க....
இல்லை
அவளை காண்பேன் என இதயம்உச்சரிக்க....
பேருந்து நிலையத்தை அடைந்த கால்தடம்....
அவள் கால்தடம் நோக்கி திரும்பியது...
எண்ணற்ற கால்தடத்தை கண்டாலும்...
என்னவளின் கால்தடம் அறியவில்லை மனம்...
காலத்தின் கட்டாயமா !
இல்லை
விதியின் விளையாட்டா !
என் இல்லம் செல்லும் பேருந்தின் இருக்கையில் அமர்ந்த உடல்...
உள்ளத்தில் பலவித ஏக்கங்கள்...
கண்களில் பலவித தாக்கங்கள்....
தோழியின் குறுஞ்செய்தி அழைப்பு...
ஏதோ என்று நான் நினைக்க....
என்னவள்இன்னும் செல்லவில்லை என அவள் சொல்ல....
விழித்திரையில்இமைகளும் விலகியது....
மனத்திரையில் இருளும் விலகியது....
விழிகள் அலைப்பாய...
தூரத்தில...
கல்லூரிப் பேருந்தை அலங்கார ஊர்தியாய் அலங்கரிக்க....
மனசுக்குள் அலங்கார தேவதையாய் அவள் நினைவு
என்னை அலங்கரிக்க...
நான் செய்த பிழையோ ?
விழியருகில் அவள் இருந்தும்...
வெகுத்தொலைவில் என்னை அழைத்துச்செல்ல.....
வெகு நாள் காத்த மனதிற்கு...
சில நொடி காக்க பொறுக்கலையோ....
கண்களில்காணவேண்டிய கன்னியை...
மனதின் நினைவுகளில் நிறைய வைக்கிறேன் என்னுள்ளே............

எழுதியவர் : (23-Aug-16, 4:10 pm)
Tanglish : manathin ninaivukal
பார்வை : 101

மேலே