சுயநலம்

கதவை திறந்து பார்த்தான் ரிக்கிஸ் ....வீட்டு வாசலில் சிவப்பு நிறத்தில் எழுதிய அட்டைப்பெட்டி பார்சல் ஒன்று கிடந்தது ...

கண்களில் பயத்தோடு தூரத்தில் இருந்தே அந்த அட்டைப்பெட்டியை விழித்து பார்த்தான் சிறுது நேரம் கழித்து அருகே சென்று பெயர் முகவரியெல்லாம் சரி பார்த்து அக்கம் பக்கம் பார்த்தான் ஒருவரும் இல்லை ..

பயம் மேலும் அதிகரித்தது ... பல கேள்விகள் அவனுள் எழுந்தது ... வியர்வை வழிந்தது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் .. நாம் யாருக்கு கெடுதல் செய்தோம் என்று பெட்டியை வளம் வந்தான் தேடினான் அனுப்பியவரின் முகவரி இல்லை ஆனால் பெட்டியின் இன்னொரு பக்கத்தில் கைபேசி எண் மட்டும் எழுதி இருந்தது ..

கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தன் கைபேசியை எடுத்து எண்ணை அழுத்தினான் ..அப்பொழுது தான் அவன் என்றோ பார்த்த பட காட்சி நினைவுக்கு வந்தது கைபேசியில் இருந்து கூட வெடிகுண்டை வெடிக்க செய்யும் முடியும் என்பது!! ஆக அந்த முயற்சியையும் கைவிட்டு யோசித்தான்

இந்த பெட்டியை வீட்டின் பின்பக்கம் இருக்கும் காட்டில் எறிந்து விடலாம் என்று தூக்கினான் .கணம் ஒன்றும் அவ்வளவு பெரியதாக இல்லை .. பெட்டியை பின் பக்கம் இருக்கும் காட்டில் எறிந்து வீடு வந்து சேர்ந்தான் ..இணையத்தில் மூழ்க தொடங்கினான் ..

அந்த பெட்டியில் என்ன இருந்தது ?? என்ன ஆனது ??என்று இன்று வரை ரிக்குசுக்கு தெரியாது..!!

எழுதியவர் : அருண்வாலி (24-Aug-16, 5:34 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
Tanglish : suyanalam
பார்வை : 596

மேலே