கடலே உனக்கொரு மடல்

நித்தம் ஓயாமல் சத்தம் போட்டு நீ
முத்தம் இடுகிறாய் கரையைதொட்டு.
கத்தும் கடலே,நீ கண்ணுக்கு விருந்தாய்,கவலைக்கு மருந்தாய் மாற்றிவிடுகிறாய் மழலையாய் எங்களை.
உன் பசிக்கு இரையாய் கரைஏறி வந்து பல உயிர்களை குடிக்கிறாய்.
அடங்காமல் அணுதினமும் கரைதாண்ட துடிக்கிறாய்.
எத்தனைகோடி கால்தடம் உன்மீது பதிக்க,
அத்தனையும் கண்டு நீ ஆனந்தமாய் சிரிக்க.
கோடிவளங்களை கொட்டி தருகிறாய்.ஆனாலும்
கொள்ளையிட அவ்வப்போது வருகிறாய்.
உன் முயற்சியைகண்டு தான் என் முகவரியை தேடுகிறேன்.
கார்மழை பொழிந்திட காரணமாய் இருக்கிறாய்.
பார் முழுவதும் விழுங்கிடபயிற்சியே எடுக்கிறாய்.
மாறாத வலிகளை வடுக்களாய் தந்தாய்.
ஆறாத காயத்தின் ஆணிவேராய் வந்தாய்.
உன் அடங்காத கோபத்தில் அடங்கிப்போனது பல மூச்சி.
நீ தின்று துப்பிய பிணக்குவியல் தானே கரையோர காட்சி.

எழுதியவர் : கு.தமயந்தி (24-Aug-16, 8:34 pm)
பார்வை : 84

மேலே