தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 61 = 203

“வெத்திலைப்போடும் மாமனுக்கு மனசு ரொம்ப பெருசு
என்னை கொக்கிப்போட உனக்கேன் தயக்கமா இருக்கு?”

“வெத்திலைமடிக்கும் சிங்காரிக்கு ஆசை அதிகம் இருக்கு
அதை அடக்காம விட்டுவிட்டா அவஸ்த்தைதான் பிறகு!”


வயலுக்குள்ள வந்தவளே! வந்து ஒண்ணு தந்தவளே
வயதாகிப் போகும் முன்னே வாழ்க்கைப்படு சின்னவளே

முக்காடு போட்ட மாப்புள உன்முகத்தை நான் பாக்கல
இராத் தூக்கமே எனக்கு சுத்தமா வர்றதில்ல..!

மத்தளம் போடமா மணி அடிச்சேனே
மாமன் மக வருவான்னு கிலி பிடிச்சேனே

என்னாசை மாமனுக்கு எல்லாமே நான்தானே
என்னுசுரு போகும்முன்னே உன்னுசுரு போகாதே


உச்சி வெயிலுல உன்னை நான் தேடிவந்தேன்
பொட்டல் காட்டுல ஏரோட்டிப் போறவனே !

முந்தாணைய அவிழ்த்துவிட்டா முகம்சுளிக்க மாட்டாயே
முக்குளித்து சொக்கிடுவேன் மோக குளத்துக்குள்ள..!

வேணாமுன்னு சொல்லதய்யா வெள்ளை மனம் என் உள்ளம்
வெண்பனியில் நனையுதய்யா அதிகாலை பூங்காவனம் !

மணநாளை குறிப்பதற்கு வா போவோம் அய்யரிடம்

நல்லநாள் சொன்னதற்கு நன்றி சொல்வோம் அய்யருக்கு !

எழுதியவர் : சாய்மாறன் (25-Aug-16, 1:55 pm)
பார்வை : 68

மேலே