ஏக்கம்
ஏக்கம்
**********
வெண்பனி நிலவே
வெள்ளை தாமரையே
உன்னை தொட்டு கூட பார்த்ததில்லையே.....
கள்ளமில்லா மழலை மொழி
கேட்டதில்லையே.....
ஆற்று மணல்வெளியில்
தெம்மாங்கு கேட்டதில்லையே.....
கடற்கரையில்
உருண்டு புரண்டு
உன்னோடு விளையாடியதில்லையே.....
வயலில் நெல்மணியின்
ஆட்டம் காணவில்லையே.....
காட்டில்
மானின் ஓட்டம்
பார்த்ததில்லையே.....
யாருமில்லா அருவியில்
நான் மட்டும் நானாய்
குளித்ததில்லையே.....
இயந்திர உலகில்
இசையை கேட்க இயலவில்லையே.....
இயற்கையை ரசிக்க முடியவில்லையே.....
உலக வாழ்வில்
அமைதி காண இயலவில்லையே.....
போரில்லா
பூக்கள் பூமியை காணவில்லையே.....
வஞ்சனை இல்லா
மனிதனை காணவில்லையே.....
பச்சை புல்லை
படுக்கையாக்கி
படுத்ததில்லையே.....
எந்தன் மண்ணை உச்சி முகர்ந்ததில்லையே.....
நந்தவனத்தின்
நடுவிலே
நாம் வாழவில்லையே.....
வறுமையை ஒழிக்கும்
ஆயுதம் என்னிடம் இல்லையே.....
~ பிரபாவதி வீரமுத்து