ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்.... பாகம்-03

சரியாக இரவு ஒன்பது மணி இருக்கும் வினோவும் தங்கையும் தூக்கத்தில் இருந்தனர். வினோவின் அணைப்பில் அவள் தங்கை நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.அத்தை வினோவின் அறை வாசலில் வந்து நின்று அவளை அவசர தொனியில் அழைத்தாள்.

"வினோ வினோ எழும்பி வா.."
என்று,
பயத்துடன் எழுந்து சென்ற வினோ
"என்ன அத்தை..."என்று கேட்டாள்.
" இப்ப உடன போய் வெளிக்கிட்டு வா..."என்றாள்.
"என்ன அத்தை இந்த நடுசாமத்தில எங்க கூட்டீட்டு போறீங்க?...."என்று அடி விழுந்திடுமோ என்ற பயத்துடன் கேட்டாள் வினோ.
"இரவு கூத்து போடுறாங்க உனக்கு பிடிக்கும் தானே அதான் வா இரண்டு பேரும் போயிற்று வருவம்..." என்று செல்லமாக சொன்னாள்.

"ஆனால்........ அத்தை தங்கச்சி தனிய தூங்குறா அதால அவளையும் கூட்டிட்டு போவம்" என்று கூற
அதற்கு அவள் அத்தை
" தங்கச்சி தூங்குறாள் தூங்கட்டும் அவளை வேற ஒரு நாளையில கூட்டிட்டு போவம் நீ கெதியா வெளிக்கிட்டு வா...." என்றாள்

அத்தை அழைப்பதைப் பார்த்தால் ஏதோ அவசரத்தில் அவர் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவளுக்கு தெரியும் அத்தை கூறுவது பொய் என்று ஆனால் ஏன் என்றும் தெரியவில்லை வரவில்லை என்றாலும் விடமாட்டார் என்று அவள் அத்தையின் சூழ்ச்சி தெரியாமல் வேகமாக உடையை மாற்றி தலைமுடியை வாரி இழுத்து விட்டு அத்தையுடன் புறப்பட்டு சென்றாள்.

நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஆனால் எந்த சத்தத்தையும் காணவில்லை
"ஐயோ அத்தை கால் வலிக்குது.....என்னால எனியும் நடக்க முடியாது.." என்றாள் வினோ.
"இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான்..."என்று மெதுவாக கூறினார். வினோவிற்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.............
தொடரும். ............

எழுதியவர் : சி.பிருந்தா (26-Aug-16, 12:52 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 144

மேலே