சொல்லி விடு

இலக்கணம் அறியாதவன் நான்..!
தலைக்கனம் இல்லாதவன் தான்..!
ஒரு கணம் உன்னை பார்த்ததும்
ஒரு நூறு கவிதைகள் கொட்டுதடி..!
மறு கணம் உன் இதழ் சுழிப்பில்
அத்தனையும் தவிடு பொடி..!
விரிந்த இதழ்களிலே
வலை வீசி போறவளே..!
கருத்த விழிகளிலே
என்னை கடத்திக் கொண்டு போறவளே..!
ஒற்றைச் சொல்லாலே
என்னை உரசி விட்டு போறவளே..!
சற்றே நின்று விடு!
உன் எண்ணம் என்ன
சொல்லிவிடு!

எழுதியவர் : நிவேதா சுப்ரமணியம் (26-Aug-16, 1:52 pm)
Tanglish : solli vidu
பார்வை : 305

மேலே