இது கவிதை இல்லை.....

(என் மறக்க முடியா பயணம்)
அது ஒரு அவசரப் பயணம் எனக்கு....
அரசுப் பேருந்தில்....
.
கிடைத்த ஒற்றை இருக்கையில்
என் உடல் பொருத்தி .....
பக்கத்துக்கு இருக்கையை பார்த்தேன்....

அவரின் இரு கையில் ....
ஒரு கை முழுமையாய் கருகி...

எதிர் இருக்கைகோ
முகம் முழுதும் கந்தகத் துளைகள்....

பயணிகளில் பாதி....
ஏதோ ஒன்று இழந்தவர்களாய்....
முன்தினம் நேர்ந்த பட்டாசு ஆலை விபத்தின்
மிச்சமாய் போனவர்கள்....
அச்சமாய் பயணித்தபடி இருந்தனர்....
சொந்த ஊருக்கு...என்னோடு....

ஐந்து வயதிருக்கும் சிறுமி ஒருத்தி
அலறிய படியே இருந்தாள்....
கருகிய கைகளின் வலி தாளாமல்....

இதயம் இயங்க முடியா வலியுடன்
இணைந்த படி இருந்தது அந்த பயனத்தில்....

இறுதியாய் முடிவு செய்தேன் ...
உறுதியாய்....
கடவுள் இல்லை என......

பயணம் முடிந்தது....
நினைவுகள் முடியவில்லை....

பட்டாசு பார்க்கும் போதெல்லாம்....
வந்து விடுகிறது
அந்த சிறுமியின் முகம்.....
வெடிக்கிற சத்தமெல்லாம் ...
அவளின் அழுகுரலாய்...

ஒவ்வொரு முறையும் வெடிக்கும் போதும் ...
எண்ணி பாருங்கள் தோழர்களே...
கரியாகிப் போகிற பட்டாசுகளுக்காய்....
கரியாகிப் போகிற வாழ்க்கைகளை..
கல்வியை தொலைத்த சிறுமிகளை...

யார் கண்டது? நீங்கள்
வெடிக்காமல் தவிர்த்தால்...
நாளை அவர்களுக்கு...
விடியல் பிறக்கலாம் ........
வெறுமென வாழ்வதை விட...
விடியலாய் வாழ்வதில்
குறையில்லை தானே ....?

எழுதியவர் : (27-Jun-11, 9:46 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : ithu kavithai illai
பார்வை : 339

மேலே