ராத்திரி வறுமை

மாலைப் பொழுது மங்க

திருமதி வாசற்படியில்

வாடிய மலராய் வீற்றிருக்கிறாள்

மன்னவனின் காலடி சுவடுகள்

எப்பொழுது தன் வாசலில் பதியுமென

வாடிய பூவிதழ்கள் உதிர்வதைப் போல

ஏக்கங்களில் கண்ணீர் சிந்த

விழிப் பார்வை விலகாமல்

வாசலின் முகப்பை நோக்கி

கவிதை வரி எழுதுகின்றாள்

என் கூந்தல் வருடிய

கை விரல்களுக்கு முத்தங்கள் பொழித்து

என் கண்ணத்தோடு அணைத்துக் கொள்ள

ஏக்கங்கள் கூட்டுவேன் என்னவனே...வா...

என் இதழ் தீண்டும்

உன் வேர்வைத் துளிகளின்

தாகம் தீர்ப்பேன் என்னவனே...வா...

என் இமை சிமிட்டும்

மீசை நரைகளை நீ சிணுங்க

கடித்துப் பிடுங்குவேன் என்னவனே...வா

என் தேகம் சீண்டும்

உன் மூச்சுக் காற்று

என் நுரையீரல் தீண்டும்

நெருக்கம் வேண்டும் என்னவனே...வா...

குளிரில் என் உடல் நடுக்கம் போக

உன் தேகங்களின் அணைப்பும்

என் உதடுகளில் பிரிவினை போக்க

உன் உதடுகளின் முத்தமும்

வேண்டும் என்னவனே...வா...
வா...வா...வாயென

கற்பனையாய் மேகத்தில் இவள் வரைந்த

தன் மன்னவனின் முகம் காற்றில் கரைய

ஏக்கங்களின் கண்ணீர்-மீண்டும் பெருகவும்

என்னவனின் நிழல் வாசலில் விழவும்

ஓடிச் சென்று கட்டித் தழுவி

முத்த மழை பொழிந்து

சாப்பிட்டியா மாமாவென

இவள் வினா எழுப்ப

அவன் விழிகளில்

எந்த அறிவிப்புமின்றி கண்ணீர் வழிய...

தொடரும்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (28-Aug-16, 11:22 am)
Tanglish : raathri varumai
பார்வை : 170

மேலே