பிரளயம்...

சொற்களுக்கும் அர்த்தங்களுக்கும்-
இடைவெளியில்லா...
வார்த்தைகளால்...
மனவெளிகளை வார்ப்பதன் பயனாய்,
காலமெனும் பெருநதியை...
திடமாக்கி இமயமாக்கும்,
பகீரத பிரயத்தனத்தில்,
ஒழுக்கத்தின் கதிர்களால்...
திணைத்தனைப் பொழுதில்...
உறைந்த காலம் கரைந்து,
ஜீவ நதிகளாக ...
நவ நாகரீகங்களை தோற்றுவித்தப்பின்...
அதன் எல்லைகளை மீறிப்பாய்ந்த பொழுது...
எதிர்மறைகளை புதிய விதிகளாய்ப் புனைந்து,
மாற்றங்களின் மாறுதல்களிடையே-
மாறாமல் வேடம் புனையும்,
குணப்பிரகாசங்களின்,
ஒளிகளுக்கெல்லாம்...
இருளை இனங்காட்டும்-
ஆதியொளி தனது -
மீட்டுருவாக்கத்தில்...
தன்னைத்தான்,
வெளிப்படுத்தி-
ஈடுபடும்.....

எழுதியவர் : ரமண பாரதி (28-Jun-11, 12:38 am)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 395

மேலே