போதி மரம்

யானை முகத்தோனுக்கு,
இனிய கோயிலளித்து...
யாகத்திற்கு,
இணையில்லா சமித்தளித்து...
யாசகனுக்கு,
இடமளித்து...
யாத்ரீகனுக்கு,
இளைப்பாறலளித்து...
யாருமற்றவனுக்கு,
இருப்பையளித்து...
யாது ? யாது ? என்றவனை,
இகபரமழித்து-
திகம்பர புத்தனாக்குகிறது....