மணி மகுடம்

மணி மகுடம்
என் கற்பனை
ராஜ்யத்தில்
ராஜா நான் - இந்த
ராஜ்யத்தில் கஜானா பூஜ்யம் தான்.
செங்கோல் ஏந்தாத மாமன்னனும்
சொத்துவரிக் கட்டாத குடிமகனும்
செழுமை ராஜ்யத்தின் ஏவலாளியும் நானே
வார்த்தைகள் உள்ளவரை நான்
வாலிபன் தான் - வெள்ளைத்தாள் மாளிகையில்
வசதியை பெருக்கிகொள்ளும்
வாடாத குடிமகன் தான்.
எழுதுகோலே என் போர்வாள்
எதிரிகளை ரத்தம் சிந்த வைப்பதில்லை
எதார்த்தமாக அவர்களை
சிந்திக்க வைப்பவன்.
கவிதைகளே என் காலாட் படைகள்
என் நினைவுகளால் அவைகளுக்கு
நித்தம் அமுதம் அளிப்பவன்.
வறுமை - என் ராஜ்யத்தில்
வசதி பெறுவதேயில்லை.
தீயவர்கள் - என் ராஜ்யத்தில்
தலைஎடுப்பதேயில்லை - அதனால்
என் ராஜ்யத்தில் ராஜா நான் - எனக்கு
மணிமகுடம் சூட்ட எந்த
மாமன்னர்களையும் எதிர்பார்ப்பதில்லை.
எனக்கு நானே
மணிமகுடம் சூட்டிக்கொள்வேன்.
அணித்திரள வார்த்தைகள் என்னை என்றும்
வாலிபனாகவே வாழவைக்கும்.
வருத்தம் - என் ராஜ்யத்தில்
சீர்திருத்தம்.
ஆம் - பொருத்தமானவர்கள்
அழுத்தமாய் சபை ஏறுவதால்
அர்த்தமற்ற வருத்தங்கள்
அறுவடைக்கே இல்லை

எழுதியவர் : காஞ்சி.வாசவததன் (27-Jun-11, 7:12 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 402

மேலே