ஊஞ்சல்
ஊஞ்சல் ஆடும் வயதில்
இங்கு ஓர் உயிர் ஊசல் ஆடுகிறது...
கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் வயதில்...
அவளை சுற்றி வேடிக்கையான கூட்டம்....
இங்கு
அவள் தன் உயிரை
கயிறாக திருகி
நடனம் ஆடுகிறாள் ....
ஆம், இது ஓர்
உயிர் ஊசல் ஆட்டம்.....
இங்கு
இவளுக்கு கடவுள்
ஒரு ரூபாய் போடும்
தர்மன்....
இதை காண
என் கண்கள் என்ன பாவம் செய்ததோ.....
என் கண்ணீரும் கலங்குகிறது....
என் தெய்வமே....!
என்னவள் கரையோர வாழ்க்கை
கரை சேருமா...........
-ஜ.கு.பாலாஜி.