அட கிறுக்கா

ஆம்! என்று உடனே ஒப்புக்கொள்வதில்
என்ன குறைந்து விடபோகிறதா??
பச்சிளங்குழந்தை பஞ்சுமிட்டாய் காரனை
பார்ப்பது போலான உன் பார்வை..
அவ்வளவுதானா? என்று
மீண்டும் மீண்டும் கேக்கும் உன் அப்பாவித்தனம்...
இருந்தாலும் இல்லை என்று சொல்வதில்தான் நீ கெட்டிகாரியாச்சே
என்று நான் கேக்கும் படி முனகி விட்டு,
கோபமும் சோகமும் கலந்த முகத்தோடு
எங்கோ பார்க்கும் உன் முகம் பார்க்க முடியாமல்
அட கிறுக்கா! உண்மைதானடா என்று நான் சம்மதிக்கையில்
ஏதோ உலகையே வென்றவன் போல் நீ கொள்ளும் கர்வத்தை
நான் ரசிப்பதில் உள்ள சுவாரஸ்யம் குறைந்துதானே போகிறது..