நான் ரொம்ப நல்லவன்

நெருப்புக் கோளமாய் விழிகள் சிவந்தவன்...
கரும்பாய் இனிக்கும் இதயம் கொண்டவன்...
விருட்சத்தின் பசுந்தளிரை விஞ்சும் மனமுடையவன்...
விரும்பியவளை விட்டு விலகாதக் குணமுடையவன்......


உடுத்தும் ஆடையில் அழுக்குகள் இருந்தாலும்
உள்ளத்தின் ஆடையில் அழுக்குகள் அற்றவன்...
செங்கனி இதழே மான்விழி அழகேயென்று
வர்ணம் தீட்டும் கவிதையின் கொற்றவன்......


வஞ்சங்க ளென்பது நெஞ்சினில் இல்லை...
வஞ்சிகளை வணங்கிடும் அழகான முல்லை...
நஞ்சு மொழிகள் எந்நாளும் பேசுவதில்லை...
கொஞ்சிடும் கிளிகளாய் வாழ்ந்திடும் பிள்ளையே......


தென்றலாய் தவழ்ந்திடும் சிங்கக் குட்டியென்று
ஊரே சேர்ந்துதான் தாலாட்டுப் பாடுமே...
தண்ணீரும் தாமரையில் ஒட்டிக் கொண்டுதான்
தரணியின் தங்கமகன் இவனென்று சொல்லுமே......


சமூகத்தில் கேடுகள் விளைவிக்கும் கொடியவரிடமும்
சாபங்கள் கொடுக்கும் தீயவரின் முன்னும்
கோபக்காரனாக முரடனாக முகமூடிகள் அணிந்தவன்...
ஆனாலும் நான் ரொம்ப நல்லவனே......

எழுதியவர் : இதயம் விஜய் (3-Sep-16, 8:52 am)
Tanglish : naan romba nallavan
பார்வை : 840

மேலே