இருவர் உயிரை வாழ வைத்த அதை அறியா தியாகி - கவிதையில் ஒரு கதை

உன் மேல் எனக்கு காதல் இல்லை

என்று பண்பாய்க் கூறியும்

தொடர்ந்து வந்து தொல்லை புரிந்தான்

முடிவில் ஒரு நாள் ஆத்திரத்தில்

மதி இழந்தான் அவளை பின் தொடர்ந்தான்

கூரான ஆயுதத்தால் அவளைத் தாக்கி

ஓடி தலை மறைவானான் ; இன்றுவரை

அவன் காணவில்லை


அடிபட்டு ரத்தத்தில் சாய்ந்த பெண்

மருத்துவமனையில் உயிருக்கு போராடி

முடிவில் மருத்துவர்கள் அவளை

"மூளைச்சாவு" ஏற்பட்டது கூற

அக்கணமே அவள் பெற்றோரும் சார்ந்தோரும்

முடிவெடுத்து அவள் கண்களும் இருதயமும்

எடுக்கப்பட்டு மாற்று அறுவைக்கு சென்றடைந்தன


இன்று அவளைப்போன்ற ஒரு அழகிய பெண்

ஆனால் பார்வையற்றவளாய் இருந்தவளுக்கு

அவள் கண்கள் பொருத்தப்பெற்று பார்வை மீண்டது

அவள் அவள் பார்வையில் உயிராய் ....................



அதோ அந்த தாய் சிறு வயதினள்

இரு குழந்தைகளுக்கு தாய்

அவள் இருதயம் பழுதடைந்தது

மாற்று இருதயம் வைத்தாலே

வாழ்வு உண்டு என்று நாட்களை

எண்ணிக்கொண்டு மருத்துவமனையில்.................



அவளுக்கும் வெற்றிகரமாய் இவள்

இதயம் பொருத்தப்பட்டு இன்று

அது டிக் டிக் என்று மீண்டும்

இளமையுடன் ஒலிக்குது

அவள் இதயம் இவள் இதயத்தில்


காமுகன் ஒருதலை காதலில் தோல்வி கண்டு

தாக்கினான் அவளை

போராடி உயிர் நீத்த அவளோ

இன்று ஈருயிரை வாழ வைக்கிறாள்


இதை என்ன என்று சொல்வது

ஓர் உயிர் போய்

ஈருயிரை வாழவைத்த

தன்னை அறியா தியாகத்தின் மேன்மை ?..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Sep-16, 5:39 pm)
பார்வை : 55

மேலே