இது யாருடைய குற்றம்

மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள்
அதன் அம்மாக்கள்.கருப்பு நிறத்தில் ஒரு
குழந்தை கந்தல் ஆடையுடன் தான்
நகர்ந்தால் தன் பிம்பம் நகர்வதை
கண்ணாடியில் காண்கிறது,மீண்டும்
நகர்கிறது,மீண்டும் பார்க்கிறது.

அம்மா இரும்மிக்கொண்டே
திட்டுகிறாள்,தன் ஆராய்ச்சியை
அகற்றிவிட்டு ஓடிச்சென்று
நாற்காலியில் அமர்கிறது.

மற்றொரு குழந்தை வெள்ளை
நிறத்தில் ஆடம்பரமான காலணி,
ஆடை அணிந்து கையில்
கைபேசியை வைத்து விளையாடிக்
கொண்டு பொம்மைபோல்
உட்கார்ந்து கொண்டு இருக்கிறது,
அம்மா முறைத்ததும்
சிலைபோல் நாற்காலியில்
அமர்கின்றது.

பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்த
குழந்தை அன்றாடக் கூலி
வேலையில்,உட்காந்திருந்த
குழந்தை நாற்காலியில் முதலாளியாய்
முகம் பார்க்கும் கண்ணாடி
தொழிற்சாலையில்,மருத்துவமனை
மட்டும் அப்படியே இன்னும்
10 கண்ணாடிகளைக் கொண்டு
அலங்கரிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.

இது யாருடைய குற்றம்?

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (5-Sep-16, 5:19 pm)
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே