உண்மையில் சுதந்திரம் பெற்றோமா
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா [கவிதை]
தமிழ் நெஞ்சமே கேள்.
உலகத்திற்கு உண்மை சொல்ல
போகின்றேன் ஒருஉண்மை சொல்ல
போகின்றேன் கேள் உலகமே
உண்மையில பெற்றோம் சுதந்திரம்
ஆஹா என்ன உலகம்
பல நாட்களாக போராடினோம்
பெற்றோம் சுதந்திரம் அதனை
நமது தாய் நாட்டிலே
போராடி பெற்ற சுதந்திரத்தை
பெற்றோம் சுதந்திரம் இரவினில்
ஆனால் விடிந்ததா என்றால்
கேள்விக் குறியே ஆகுமே
இரவினில் பெண்கள் சுதந்திரமாக
வெளியே வந்தால் கள்வர்கள்
பயத்தினாலும் காமுகர்களின்
பயத்தினாலும் முடங்கியே உள்ளனரே
வீட்டிலிருந்து வெளியேறினால்
காவலாளிகள் எனும் பெயரில்
சில குற்றவாளிகளின் பிடியில்
அகப்பட்டு செய்யாத குற்றத்திற்காய்
வழக்காடு மன்றத்திலே அசிங்கப்பட்டு
நிற்கின்றனரே ஆனால் உண்மை
குற்றவாளிகள் தப்பினர் செய்யாத
குற்றத்திற்கு அப்பாவிகள் மாட்டுகின்றனர்
வாங்கிய சுதந்திரத்தை பேணிப்
பாதுகாக்க துப்பு இல்லை நம்மிடம்
ஆனால் வெளியில் சொல்லுகின்றோம்
சுதந்திர இந்தியா என்று