தினம் ஒரு தத்துவ பாட்டு - 38 = 216

கண்கள் உறங்கும்போது கனவுகள் தோன்றுது - கெட்ட
கனவுகள் காணும்போது கண்கள் விழித்துக் கொள்ளுது….!
பூபாளம் பாடும்போது பூக்கள் விடியல் நோக்குது –
பூக்கும் பூக்களுக்காய் வண்டுகள் காத்திருக்குது..!

வாடாத மனமுண்டோ வாழும் உலகிலே..?
வதங்காத மலருண்டோ பூக்கும் மரத்திலே..?
தேயாத நிலவுண்டோ நீல வானிலே…?
தோயாத பாலுண்டோ புரை மோரிலே…?

வசதிகள் வந்த பின்னால் கர்வங்கள் சேர்ந்திடும்
வாழ்நாள் தவறுக்காய் பின்நாளில் வருந்திடும்..!
விளக்கில் எண்ணை குறைந்தால் சிட்டம் கட்டிடும்
கணக்கில் எண்னை மறந்தால் கட்டம் கட்டிடும்

வேஷங்கள் போடுவோரின் முகத்திரை கிழிந்திடும்
சில்மிஷங்கள் புரிவோரின் பாவமூட்டை பெருத்திடும்
அகம்பாவம் கொண்டோரின் ஆணவங்கள் அழிந்திடும்
சம்பவங்கள் நிகழ்வதை சங்கதிகள் சொல்லிடும்.!

எழுதியவர் : சாய்மாறன் (7-Sep-16, 5:49 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 160

மேலே