அவள் ஒரு தேவதை

தேயாத நிலவு அவள்
கலையாத மேகம் அவள்
அழியாத வானவில் அவள்
பேசும் ஓவியம் அவள்
நடக்கும் சிலை அவள்
உதிராத பூ அவள்
சுடாத நெருப்பு அவள்
மாலைநேர தென்றல் அவள்
வற்றாத நதி அவள்
அதிகாலை பனி அவள்
மயக்கும் இரவு அவள்
யாரும் அறிய அதிசயம் அவள்

எழுதியவர் : பர்வதராஜன் மூ (8-Sep-16, 12:52 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : aval oru thevathai
பார்வை : 755

மேலே