இது தான் நீ கொண்டாடும் சுதந்திரமோ

கடைத்தெரு செல்லும்
பெண்டிர் கைவளையலையோ
கன்னியவள் கற்பினையோ
களவுக்கு காணிக்கையாய் தந்து
வீடு திரும்பி கறையோடு வாழேன்
என்றுயிர் மாய்க்க செய்திடுது..

காணும் இடமெங்கும்
கட்சி கொடி பறக்க விட்டு
சாகாவரம் பெற்ற அரசியலால்
சமூக மானுடத்திற்கு சாதியை
ஆயுள் பிணியாக்கி மதியிழந்த
மிருகமாய் மக்கிச்சாக கண்டிடுது..

என் தமிழ் மண்ணில்
பணம் விரித்த பாடையிலே
அடுப்பென்ன படிப்பென்ன
அனைத்தையும் படையலிட்டு
பாமர விவசாயிக்கு தற்கொலையே
மீதமெனும் சேதியை தந்திடுது..

தியாக உறவுகள் மீட்டெடுத்த
சுதந்திரத்திற்கு இழிவிழைத்து
வாழ்வியலில் ஏற்றத்தாழ்வில்லை என
பொய்கூறி மனித நேயத்தை ஏமாற்றி
மனப்பாசாங்கு செய்வது தான்
நீ கொண்டாடும் சுதந்திரமோ..

அப்படியானால்
என்னில் உயிராடும் தியாக உறவுகளை
போற்றி மீண்டும் உயிர்த்தெழச் செய்யும்
சுதந்திர வாழ்வில்லா போராளியாவேன்..

தமிழ் பாமரன்
க. சரவணக்குமார்

எழுதியவர் : தமிழ் பாமரன் க. சரவணக்குமா (7-Sep-16, 11:35 pm)
பார்வை : 839

மேலே