எல்லைக்கோடு

எல்லை இல்லா அன்பை மட்டும்
எடுத்துக் கொள்வோம் உலகிலே
எல்லைக் கோடு போடும் கூட்டம்
இருக்க வேண்டாம் அருகிலே
தொல்லை தரும் எல்லைச் சண்டை
நிதமும் நமக்குத் தேவையா
தோளின் மேலே கையைப் போட்டு
இருந்தால் கலக்கம் இல்லையே
எல்லைக் கோடே இல்லா உலகம்
பிறந்து விட்டால் நல்லது
எல்லைக் காக சண்டை போட்டால்
உயிருக் கில்லை நல்லது
அன்பை மனதில் கொண்டோர் மட்டும்
புதிய உலகில் பிறக்கட்டும்
அன்பைக் கொன்று பிரிவை வளர்ப்போர்
மறைந்து எங்கோ போகட்டும்
எல்லை காக்கும் வீரர் வாழ்க்கை
முடியும் வரைக்கும் தனிமையே
எல்லை அகற்றி மகிழ்ச்சி புகட்ட
அடியும் வைத்தால் இனிமையே