அவள் நினைவுகளில்

சிறகில்லாமல்
பறக்க வைத்தாள்
அவள் பார்வையில் ....
வலியில்லாமல்
சிரிக்க வைத்தாள்
அவள் வார்த்தையில் ....
வழியில்லாமல்
நடக்க வைத்தாள்
அவள் பாதையில் ....
மொழியில்லாமல்
பேச வைத்தாள்
கண் ஜாடையில் ....
நெருப்பில்லாமல்
எரிய வைத்தாள்
அவள் பிரிவினில் ....
கடவுளில்லாமல்
வரம் கொடுத்தாள்
அவள் அருகினில் ...
காலியில்லாமல்
நிரப்பி விட்டாள்
அவள் நினைவுகளில் ....
என் ஒவ்வொரு நொடியும் ....