மெல்லத் திறந்தது காதல்

மலரும் மலரினைப் போல
புலரும் பொழுதினைப் போல
பலரும் அறியா வண்ணம்
காதல் பிறந்தது திண்ணம்
விழிமூடித் திறந்திடும் முன்னே
இதழ் சொல்லையொலித்திடும் முன்னே
காதல் மெல்லியகாற்றாய் வீசும்
தெளிவாக மனதிற்குள் பேசும்
காதல் மொழியது மிகஇனித்திடுமே
காதல் பொழிவது மிகப்பிடித்திடுமே
காதல் இசையதில் மனம்லயித்திடுமே
காதல் கடலினில் இறங்கினால்நலமே
காதல் பாடலும் நனிச்சுவையே
காதல் வார்த்தைகள் தனிச்சுவையே
காதல் பிறந்திட்ட நொடிகள்பின்னே
நினைவுகள் ஒவ்வொன்றும் மிகச்சுவையே
வரும்முன் காப்பது நல்லது
காதல்வரும்முன் கவிதைகள் நல்லது
காதல் வந்தபின்னாலே வார்த்தைகள்
காதலி பெயரை மட்டுமேசொல்லுது