வெண்டைக்காய்
கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.
கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.
காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?..
ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.
மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.
மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில் கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள்..
அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,
இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வெண்டைக்காயைப் பார்த்ததும் மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?'' என்றாள்.
கணவனுக்கு மயக்கம் வந்தது.