விவசாயி
விவசாயி
ஊரும் உயிரும் வாழத்தானே நாங்க விதைக்கிறோம்
நாடு வளம் பெறத்தானே நாங்க உழைக்கிறோம் !!
விலைவாசி ஏறிப்போச்சி வாங்கமுடியால
ஏறு கூட எந்திரமாச்சி தாங்க முடியல !!
கடன உடன வாங்கித்தானே நாங்க வாழுறோம்
கடவுள் கிட்ட முன்னேற வழிய தேடுறோம் !!
இயற்கை கூட எங்களைத்தான் கலங்க வைக்கிது
இதயமெல்லாம் கந்தலாக கிழிந்து கிடக்குது !!
மனிதனோட ரத்தமெல்லாம் மறுத்து போகுது
மனிதநேயம் மண்ணுக்குள்ளே புதைய தொடங்குது !!
காவேரி தண்ணிக்கேட்டு தவிச்சி நிக்கிறோம்
கழனி எல்லாம் கருகுதேன்னு உதவி கேக்குறோம் !!
தவித்த வாய்க்கு தண்ணிகொடுக்க தடையா நிக்குறாய்
தமிழனோட பண்பாட்டை கெடுக்க நினைக்குறாய் !!
ஒரே நாடு ஒரே பூமி நிலைய மறக்குறாய்
நாட்டோட ஒற்றுமையை பிரிக்க நினைக்கிறாய் !!
கரி சோறு தின்னுகிட்டு காலம் கழிக்கிறாய்
கஷ்டமே தெரியாம கறுத்து பேசுறாய் !!
கருவாடா வாடுதேன்னு கதறி துடிக்கிறோம்
கடனாளியாக நாங்க உயிரை இழக்குறோம் !!
அரசாங்க உத்தரவு ஓத்துழைக்கிது இருந்தாலும்
அவமானம் பட்டுத்தானே பித்துபிடிக்கிது !!.
இந்தியாவின் ஒற்றுமையை உலகம் போற்றுமே
இந்தியனாய் ஒருங்கிணைந்து உயர்ந்திடுவோமே !!