அத்தையின் காதல்

அவளுக்குச் சிறகுகள்
முளைக்கத் துவங்கிய பொழுதில்....

அவள் சிறுமியின் வயதிலிருந்து
விடுபடத் துவங்கி இருந்தாள்.

அவள் வரைந்த
கோலப் பூச்சிகள்
வாசலில் மறைத்து வைத்திருந்தன
அவள் கனவின் இதயங்களை.

தினமும்....
நீர்க்குடத்தில் தளும்பிய
வார்த்தைகளைத்
தரையில் தேடியபடி...
வீடு திரும்புகிறாள்
இரவுகளில் அவளுள்
விரியும் புன்னகையோடு.

முகம் காட்டும் கண்ணாடியில்
தன தயக்கங்களை
ஒளித்து வைக்கிறாள்
ஒரு மாயப் புன்னகையென.

இரவில் விரியும் தோகைகளால்
பகலை வருடிக் கடக்கையில்தான்...

தானியங்களுக்காகத்
தயாரிக்கப்படுகிறது
அவளின் கூடு.

கேலிச்சித்திரங்களாகிவிட்ட
கனவுகளிலிருந்து
தரையிறங்குகிறது
அவளின் ஆகாயம்.

பிறிதொரு நாள்.....

பழையவை தேடிக் கலைக்கையில்...
கிடைக்கிறது....

முறிந்த சிறகுகள்.

எழுதியவர் : rameshalam (12-Sep-16, 12:51 pm)
Tanglish : atthayin kaadhal
பார்வை : 191

மேலே