♡♡♡ வலியுடன் ஒரு காதல் கதை ♡♡♡
காதலி: டேய் உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்
காதலன்: சொல்லுடா
காதலி: அவன் என்ன ரொம்பவும் தொந்தரவு பன்றன்டா
நான் உன்னை லவ் பன்றதும் தெரிஞ்சிருந்தும் என்னை அசிங்கமா பேசரான்டா
காதலன்: நீ கவலைப்படாத தங்கம் இனிமே அவன் உன்னை தொந்தரவு பண்ண மாட்டான் அவன்கிட்ட நான் பேசறேன்
டேய் நானும் அவளும் லவ் பண்றோம் நீ ஏன்டா அவள தப்பா பேசற.
அவன்: நீ லவ் தான பண்ற
நானும் அவள லவ் பண்றேன் இதுல என்ன தப்பு
காதலன்: நீ ரொம்பவும் தப்பா பேசறடா
(இருவரும் பேச காதலனுக்கு கோபம் வந்து ஒரு கட்டயால் அவன் மண்டையில் அடிக்க அவன் இறந்து விடுகிறான்)
(காதலனை கைது பண்னி போகும் போது)
காதலி: டேய் ஏண்டா இப்படி பண்னுன இனி எப்படா உன்ன பார்பேன்
காதலன்: உன்னை பத்தி அவன் அசிங்கமா பேசினா என்னால தாங்க முடியல அதுதான் இப்படி ஆயிருச்சு.
காதலி: நீ கவலைப்படாதடா எவ்வளவு வருசம் ஆனாலும் உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்
(7 வருடம் தண்டணை காலம் முடிஞ்சதும் காதலியை தேடி அவ வீட்டுக்கு வரான் அங்க காதலி இல்லை காதலியோட தோழியை பார்த்து கேக்கிறான்)
தோழி; எனக்கு சொல்றதுக்கு தயக்கமா இருக்கு
நீ ஜெயிலுக்கு போன 1 வருசத்துல அவ ஒரு மிலிட்டிரில ஒர்க் பண்றவன கல்யாணம் பண்ணிட்டா
காதலன்; இல்ல நான் நம்ப மாட்டேன் அவ எனக்கு துரோகம் பண்ன மாட்டா
எங்க காதல் உண்மையானது
(காதலியோட விலாசத்தை வாங்கிக்கொண்டு அவளை பார்க்கப்போகிறான்
அவள் கழுத்தில் தாலியைப்பார்த்ததும் அவனை அறியாமலே கண்ணீர் வர)
காதலன்: ஏண்டீ என்னை மறந்துட்டு எப்படிடி இன்னொருவனை கல்யாணம் பண்ன மனசு வந்தது?
நீ என்னை மட்டும் சாகடிக்கலடீ
என்னோட உண்மையான காதலையும் சாகடுச்சுட்ட
காதலி; என்னோட உயிரே நீ தான்டா
எனக்காக உன்னோட வாழ்க்கையே தியாகம் பண்னுனவன்டா நீ
உன்ன மாதிரி லவ்வர் எத்தன பொண்ணுகளுக்கு கிடைக்கும்
நான் ரொம்பவும் குடுத்து வைச்சவடா
நீ ஜெயிலுக்கு போனதுக்கு அப்பறம்
எங்க வீட்டுலியும் கல்யாணம் பண்ணிக்க என்னை ரொம்பவும் தொல்லை பண்னுனாங்க
இந்த உலகம் ஒரு,பொண்ணு தனியா இருந்தா
எப்படி எல்லாம் தப்ப பேசுவாங்க
என்னை யாரும் நிம்மதியா வாழ விடுலடா
அதனாலதான்
காதலன்: அதனாலதான்
காதலி: எனக்கு நானே தாலி கட்டிட்டேன்டா எல்லார்கிட்டேயும் மில்ட்ரிகாரரை கல்யாணம் பண்ணிகிட்டதாகவும் வருசத்துக்கு 1முறைதான் வருவாருன்னு பொய் சொல்லிட்டேன்டா நான் ஒரு நாள் வாழ்ந்தாலும் அது உன்கூட மட்டும்தான்டா
அதுவே எனக்கு போதுன்டா
i love you da என்று சொல்லி அவன் மார்பில் சாய்ந்து கொள்ள
7வருடம் அவன் பட்ட துன்பமும் வேதனையும் அவள் சொன்ன அந்த ஒருவார்த்தையில் கரைந்து போனது.