என்னை அவருக்கு நன்றாகத் தெரியும்

ஒரு சிறு பையன் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தனது தகப்பனாரை பார்க்கும்படி சுரங்கத்தின் வாசலில் காத்திருந்தான். வேலை முடிந்து சுரங்கத்திலிருந்து ஆட்கள் வெளியே வர தொடங்கினார்கள். அப்பொழுது ஒருவர் ‘தம்பி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்’ என்று கேட்டார் அப்போது அவன் ‘ எங்க அப்பா வேலை முடித்து வருவதற்காய் காத்திருக்கிறேன்’ என்று பதிலளித்தான்.

‘உங்கள் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது’ நிலக்கரித் தூசியால் முகம் கருப்படைந்து இருக்கும்’ தலையில் தலைகவசம் அணிந்து சுமார் 700 பேர் வருவார்கள். உனக்கு அவரை தெரிந்து கொள்ள முடியாது. நீ வீட்டுக்கு போ என்றார். அதற்கு அச்சிறுவன் ‘எனக்கு அவரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் எங்க அப்பாவுக்கு ‘என்னை நன்றாகத் தெரியும் என்று பதிலளித்தான்’. எவ்வளவு ஒரு ஆச்சரியமான பதில்.

எழுதியவர் : சொ. பால்சாமுவேல் (15-Sep-16, 11:23 am)
சேர்த்தது : Paulsam Sorna
பார்வை : 602

மேலே