அடையாள அட்டை

தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.

"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.

"நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.

"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.

வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

அவருக்குப் பின்னால், முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார்.

தன்னைக் காப்பாற்றும்படி அலறிய அதிகாரியிடம் விவசாயி சொன்னார்,
"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்"

எழுதியவர் : செல்வமணி (15-Sep-16, 1:16 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : adaiyala attai
பார்வை : 554

மேலே