எப்படி கண் நோக்கும்
ஆலமரத்தின் விழுதுகள் .....
நிலம் தொடுவதுபோல் .....
உன் கூந்தல் நிலத்தை ....
தொடும் அழகு .......!!!
என்னவளே .....
அருவியில் நீ குளிக்காதே .....
இரண்டு அருவியை எப்படி .....
என் கண் நோக்கும் .......?
நீ
வியர்வையுடன் வெளி வராதே ......
வண்டுகளும் தேனீக்களும் .......
மொய்க்கப்போகின்றன ........!!!
பூ மரத்தை பார்ப்பர் .....
பூந் தோட்டத்தை பார்ப்பர் ......
நடமாடும் பூந்த்தோட்டத்தை .....
நான் மட்டுமே பார்க்கிறேன் ......!!!
&
என் பிரியமான மகராசி 08
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^