நிலம் காணுதல் நிரந்தரம்

மேலேயும் கீழேயும்
ஒரு சந்திப்பு.

மேலே பறக்கும் ஓர்
ஊர்தி வானம் பிளந்து
காற்றைக் கிழித்து
பாய்கிறது
இராட்சத வேகத்திலே!

வான நீல நிறம்
ஒரு பொழுதிலே
வெண்மையாக மாறி
மீண்டும் நிலமாக
கொப்பளிக்க.


கீழே செல்லும்
ஊர்திகள்
சில அசுர வேகம்
கொண்டு பாய
சில மிதமான
கோர்வையில் செல்ல
பல ஊர்ந்து
நகண்டு நகர்ந்து
போகும் நேரம்
விதமான
போக்குவரத்துக்கள்
நிலத்தின் மேலே என்று
அறியுங் கால்
நிலத்தின் அருமை
நெஞ்சம் நிறப்ப!


உயரப் பறக்கும்
வானவூர்தியோ
தரை நோக்கி
இறங்கும் கால்
ஒரு நினைப்பு

உயரப் பறப்பின்
நிலம் காணுதல்
நிரந்தரம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (16-Sep-16, 8:07 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1758

மேலே