விரிந்து பிரியும் கணவன்-மனைவி உறவு இன்றைய சமுதாயம்
நல்ல நண்பர்களாய் இருந்தபோது
வேற்றுமை ஏதும் வளரவில்லை
ஒரு ஆணுக்கு பெண் நண்பனாய் இருப்பதை
இன்றும் இங்கு பலர் ஏற்றுக்கொள்வதில்லை
இது இப்படி இருக்க
நண்பர்களாய் இருந்த அவனும் அவளும்
கணவனும் மனைவியுமாய் மாற முடிவு செய்ய
ஊரறிய உறவறிய திருமணமும் செய்து கொண்டு
வாழ்கை படகை செலுத்த தொடங்கினரே
நண்பர்களாய் இருந்த வாழ்வில் வசந்தம்
கணவன் மனைவி என்றானபோது அங்கு
தென்றல் வீசவில்லை புயல்தான் உருவானது
உறவில் விரைவில் விரிசலும் வந்தது
விரிசல் விரிவடைந்து உறவும் உடைந்து
தனிமை இருவரையும் வந்து தாக்கியது
நீதி கேட்டு நீதி மன்றம் சென்றனர்
எதற்கு நீதி என்றால் திருமணம் ரத்து கோரி
இது தான் இன்றைய அவசர வாழ்க்கையில்
கணவன் மனைவி வாழ்க்கையின் அவல நிலை
நட்பு முற்றி விவாகம் செய்தபின்
நட்பு நிலைபெற்று நில்லாமல் போவதேனோ
இதில் ஏதோ பெரிய குறை தெளிவாகிறது
இதற்கு நிவர்த்தி ஏதும் இல்லையோ
கணவன் மனைவி உறவு தெய்வம் தந்த உறவு
என்ற அன்றைய உணர்வு மீண்டும் வந்து
இளைய தலைமுறைக்கு எழுச்சி தந்தால்
மனைவி எப்போதும் இல்லத்தரசி ஆவாள்
கணவனும் அவளுக்கு கண் அவன் ஆவான்