புதுயுக படிப்பு - சுற்று சூழல் பொறியியல்

சுற்று சூழல் பொறியியல்.....!
இது புது யுக படிப்பு!
வாய்ப்புகள் அதிகரித்து வரும் படிப்பு!
சுற்று சூழல் பிரச்னைகளாம் --------
காற்று மாசுபாடு,
ஆலை சுகாதாரக் குறைவு,
கழிவு நீர் நிர்வாகம்
ஆகியவை----
இந்தப் படிப்புக்கான தேவையை
அதிகரித்திருக்கின்றன!
உலகம் வெப்பமயம் ஆதலும்
வறண்டு வரும் இயற்கை வளங்களும்
இப்படிப்பில் விடை தேடுகின்றன!
இது வெறும் பொறியியல் படிப்பு மட்டுமல்ல!
அறிவியல்,மனிதவியலையும்
பயன்படுத்தும் படிப்பு!

என்ன வாய்ப்புகள் இந்தப் படிப்பால் ........?
சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீடு!
சுற்று சூழல் மாசுபாடு கணக்கீடு!
பசுமை கட்டிட மதிப்பீட்டு சான்றளித்தல்!
கழிவுநீர் மேலாண்மை!
திடக் கழிவு மேலாண்மை!
மின்னணு கழிவு மேலாண்மை!
சுற்று சூழல் ஆலோசனையாளர்!
சுற்று சூழல் தணிக்கை!
இத்தனையும்!

சுற்று சூழல் பொறியியலில்
அலுவலக வேலைகளும் உண்டு!
வெளி வேலைகளும் உண்டு!

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும்
போட்டுக்கொண்டிருப்பதால்
இப்படிப்புக்கு மதிப்பு அதிகம்!

பொறியியல் படிக்க விழையும்
மாணவர்கள்
சுற்று சூழல் தூய்மையின் முக்கியமும் உணர்ந்து
சுற்று சூழல் பொறியியல் வாய்ப்புகளையும் உணர வேண்டும்!
மேதைகள் பட்ட மேற்படிப்பாக இதை படிக்க அறிவுறுத்துகிறார்கள்!
மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றாய் இணைந்து
இப்படிப்புக்கான சீட்டுகளை அதிகரிக்க செயல்பட வேண்டும்!
அரசு அலுவகங்களில்
இத்துறை வேலை வாய்ப்புகளை
அதிகரிக்கவும் வேண்டும்!
இப்படிப்பு படிப்போரின்
எண்ணிக்கை கூடி
தூய்மை பாரதம் உருவாகட்டும்!
சுகாதார பாரதம் உருவாகட்டும்!

எழுதியவர் : ம கைலாஸ் (19-Sep-16, 4:50 pm)
பார்வை : 573

மேலே