பயம் ?
உலகில்....
நான் செய்வதற்கான,
தவறுகள் காத்திருக்கின்றன....
செய்த தவறை,
மன்னிக்கவும் காத்திருக்கின்றன.....
தெரிந்தே செய்யும்,
தவறுகளை தொடர்வது-
புரியாத ஆச்சரியம்.....
மன்னிப்பவன் மீதான-
என் பயம்.....
சாமியாடும் பெண்ணின்-
மாமியார் கொள்ளும்,
பயம்...........