வீர புருஷோத்தமர்கள்

செக்கிழுத் தான்சிறை தன்னில் சிதம்பரம்
செக்கச் சிவந்தவா னில்விடுத லைகாண
கப்பலோட்டிக் காட்டினான் சிங்கத்வீ ரத்தமிழன்
அப்பால்சென் றான்அன் னியன்

----கவின் சாரலன்
இரு விகற்ப இன்னிசை வெண்பா

இன்று வ உ சி யின் பிறந்த நாளா ? ----இல்லை
இன்று அவர் நினைவு நாளா ? ----இல்லை
பின் ஏன் இப்பொழுது அவருக்கு கவிதை ?

பிறந்த நாம் அனைவரும் விடும் சுதந்திரக் காற்றுக்காக தம் வாழ் நாளை
அர்ப்பணித்த மேலோர்கள் . ஒவ்வொரு கணமும் இவர்களை நினைத்துப்
பார்க்க வேண்டும் .
தமிழ் நாட்டில் இரண்டு சிதம்பரம்
சிதம்பரத்தில் ஆடும் ஆடல் அரசன் ஒருவன்
செக்கை ஆட்டிய வ உ சிதம்பரம் மற்றவன் .
புருஷோத்தமர்களைப் போற்றுவோம்

அன்று
இராவணனை ஒழித்த மரியாதா புருஷோத்தமன் இராமன்
அலெக்ஸ்சாண்டரை எதிர்த்துப் போரிட்ட போரஸ் என்ற புருஷோத்தமன்
இன்று
URI யில் தாய் நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த
பாரத வீர புருஷோத்தமர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-16, 10:02 am)
பார்வை : 81

மேலே