சிப்பிக்குள் முத்து

ஆயிரம் துளிகள் மழையாய் சிதறிட
ஒருதுளியன்றோ முத்தாய் மாறும்!
அது முத்தாய் மாறிட ஆண்டுகள் காக்கிறோம்
மாறிய முத்தை நூலில் கோர்க்கிறோம்
அதன் பொறுமை மானிடர்க்கு இருக்குமோ என்ற நான்
உன்னை கண்டு சந்தேகம் தீர்க்கிறேன்
கடலில் கழித்த காலம் அதன் கோல்
மண்ணை சேரும் நாள் வருமென்று!
அதுபோல் காத்திருக்கும் இயற்கையின் படைப்பினில்
ஒரு காலை மாறப்போகும் சிப்பிக்குள் முத்து நீ!

எழுதியவர் : பாரதி (22-Sep-16, 1:41 am)
Tanglish : sippikul muththu
பார்வை : 965

மேலே