மனணம் புரிந்தால்

காலத்தை கடந்த உறவிது என்று
காதல் திருமணங்கள் ஒரு பக்கம் சொல்ல,
பொறுமையும் அருமையும் புரிந்த உறவிது
என்று நிச்சயிக்க பட்ட திருமணங்கள் சொல்கின்றன!
நடைமுறையிலோ,
பார்க்கையில் பழகையில் அவள் சரியென்று நினைத்தவன்
தன் பத்தினி ஆனபின் ஏசுகின்ற உலகிது. . .
அன்று அப்பாவை எதிர்த்து அம்மாவை கலங்கடித்து
இவன்தான் என் உரியவனென்று துணிந்து முடிவெடுத்து
வீட்டை விட்டு வெளியேறி நடந்தவள்
தனிமரமாய் இன்று மனச்சிறையில் நிற்கிறாள்!
பெற்றோர்கள் சொன்னால் கழுதையும் என் தாரம் என்றவன்
பின் அவளை இன்னல்கள் சுமக்கும் கழுதையே ஆக்கினான். . .

ஆண் அவன் செயல்கள் சொல்லி மாய்ந்திட
பெண் இவள் குட இன்று பெண்மையை மறக்கிறாள்!
பெண்ணுரிமை, சமத்துவம் இவயெல்லாம் கேட்பவள்
அவையெல்லாம் பரஸ்பரம் அன்பதையே மறக்கிறாள்!
காக்க வைத்ததும் கேலி பேசியதும்
கால்கடுக்க கடற்கரையில் காதிருந்தும் இனித்திட
இன்று அகங்காரத்தை ஊற்றி உதறிச் செல்கயில்
அத்திருமணம், பொறுமையும் பரிவும் இழந்து கசந்தது!

நீ மாண்டு மண்டியிட்டு வேண்டி கேட்ட உறவிது
உரியதாய் உனதானபின் உதாசீன படுகிறது. .
பாசமும் பரிவும் வந்த வேகத்தில் விலகிட,
விலைமதிப்பில்ல அன்பில் ஆணென்ன பெண்ணென்ன?
நேசம் சார்ந்ததே திருமணம் என்கையில்
காதலென்ன? நிச்சயிக்க பட்டதென்ன ?
இன்று இரண்டில் ஒன்று குட உறுதியான வெற்றியல்ல!
பண்பை உணராமல் வீம்புக்கு பிரிந்தவரும்
பிரிவை உணர்ந்தால் காதலால் கூடுவர்!

விட்டு கொடுத்து வாழடி
அவன் வழி விட்டு வணங்குவன்
தட்டி கொடுத்து சொல்லடா நீயும்
அவள் அன்பில் அவளையே மிஞ்சுவாள். . .

எழுதியவர் : bharathi (22-Sep-16, 2:15 am)
பார்வை : 378

மேலே