தினம் ஒரு பாட்டு இயற்கை - 39 = 231

கலர் மேகமே ! கலர் மேகமே ! - உனை
காற்று கன்னிகள் தாலாட்டுதே !
என்னவொரு அதிசயம்
கண்ணுக்குள்ளே இன்ப சுகம்
பார்க்க பார்க்க பரவசம்
வானெங்கும் உங்கள் இராஜாங்கம் !

மேகத்தின் நிறங்கள் நாலு – அந்த
நாலு நிறமும் ரொம்ப தூலு
வசந்த காலம் வந்தால்
வான் வீதியில் கலர் திருநாளூ !

மேல் காத்து அடித்து
மேகத்தை மெல்ல கலைத்து
மேனகை தாவணி பறப்பதுபோல்
மெல்லிய மேகங்கள் போகுது !

கீச்சிடும் பறவையாய் ஓர் உருவம்
சீறீடும் மிருகமாய் ஓர் உருவம்
ஓடிடும் இரதமாய் ஓர் உருவம்
ஒன்றன் மேல் ஒன்று ஊர்வலம்

படரும் மரமாய் ஓர் உருவம்
உயரும் சிகரமாய் ஓர் உருவம்
நகரும் ஓடமாய் ஓர் உருவம்
விரைந்து வருகுது கிரிவலம் !

பாம்பின் கால் பாம்பறியும்
பருவமகள் பூப்பெய்தும்
வசந்தகால மேகங்கள்
வானமெங்கும் பூச்சொறியும்

ஏழுவண்ண வானவில்லை
நிமிர்த்தியவன் யாருமில்லை
வானில் சுத்தும் கோள்களை
கையில் பிடிப்பவன் எவனுமில்லை

பூமி பந்து சுற்றும்வரை
குடும்ப சண்டை ஓய்வதில்லை
சாமி வந்து ஆடுபவரை
ஜனங்கள் என்றும் மறப்பதில்லை..

இயற்கை அன்னை அள்ளித்தந்த
இன்பவாழ்வு இந்த வாழ்வு – இதை
இகழ்ந்து கொண்டிராமல் இயன்றவரை முன்னேறு..!

எழுதியவர் : சாய்மாறன் (22-Sep-16, 10:08 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 92

மேலே