என் செல்ல மகளே
![](https://eluthu.com/images/loading.gif)
என் செல்ல மகளே!
முற்பிறவி பலனாய் என் முள்செடியில் பூத்த ரோஜா மலரே என் செல்ல மகளே!
உன் முகத்தில் தானடி என் தாயை கண்டேனடி
என் தாயை தாலாட்டும் வரம் எனக்கு தந்தாயடி
உன் முகம் கண்ட பின்னே அழகின் அர்த்தம் அறிந்தேனடி
உன் விரல் நுனி பட்டே நான் விண்ணில் பறந்தேனடி
உன் பார்வையிலேயே என்னை நான் மறந்தேனே
நீ தவழும் போதே என் மனமும் அன்பில் தவழுதடி
அப்பா என நீ அழைக்க கேட்கவே ஒரு ஜென்மம் போதாதடி
சிற்றெரும்பு உனை கடிக்க என் சிறு இருதயமும் பதருதடி
என் செலலமே, முத்தே, அம்மு குட்டியே
மறு ஜென்மம் என்றிருந்தால் உன் மகனாய் பிறபேனடி
குமா கருவாடு