மணக்காத மணம்
விழியை விட்டு விலகாதே இமையே.....
நீ இல்லை என்றால் நானும்
எனக்கு பிழையே.....
இந்த நாளும் எனக்கு சுமையே.....
எந்தன் உயிரே.....
அமுதே.....
உயிர் சென்றாலும் அருகில்
நீ வேண்டுமடி
எங்கே செல்கிறாய்
என்னை கதற வைக்கிறாய்.....
கண்மணி நில்லு
என்னிடம் பதில் சொல்லு
நான் என்ன தவறு செய்தேன்
பதில் நீயும் சொல்லி விட்டு போ
எங்கே எந்தன் உயிர் செல்லும்
அங்கே இந்த உடல் வருமே.....
உடலை விட்டு
உயிர் போனால்
இந்த உடல் மண்ணில் போகுமே.....
இந்த உடல் வெந்து போகுமே.....
உயிரே
எனை விட்டு
நிலவை தொட்டு
எங்கே செல்கிறாய்
இந்த நிலவும்
இன்று எனக்கு சுடுகிறதே....
காரணம் நீ தானே.....
எங்கே எந்தன் நிம்மதி.....
எந்தன் அருகில் வா நீ மதியே.....
என் மதியே.....
பூங்குழலி...
பூமிப்பந்தும் சுழலும் உன்னாலடி.....
உயிரே.....
வந்துவிடு.....
உயிரை தந்துவிடு.....
எங்கே எந்தன் உயிரே.....
தேடி தேடி
கண்கள்
காத்து காத்து
உயிர் போகிறதடி.....
உன்னால் வாழ்கிறேன் நாளும்.....
சீக்கிரம் வந்துவிடு.....
உயிரே.....
உணர்வே.....
தமிழே.....
பொருளே.....
எங்கே இருக்கிறாய்
விரைவில் வந்துவிடு
உயிரை தந்துவிடு.....
~ பிரபாவதி வீரமுத்து