என் உயிரே

என் உயிரே
என் உயிரின் உயிரே
என் கண்ணும் அழுகிறேதே
என் கண்ணீரும் கரைகிறேதே

நீ என்னோடு இல்லாத நாளும்
என் மௌனமும் நொந்து நொந்து சாகிறதே
நீ என்னோடு இல்லாத கணமும்
என் இதயமும் துடிதுடித்து போகிறேதே

என் உயிரே
என் உயிரின் உயிரே
என் மூச்சும் உன் சுவாசம் தேடுதடி
என் மனதும் உன் பெயரை பாடுதடி

நான் தான் பாவிய - இல்லை
என் மனம் தான் அப்பாவியா
நானும் தவிக்கிறேன் உனை காண
நாளும் துடிக்கிறேன்

என் உறவே
நானும் உரைக்கிறேன்
என் உயிரே
நானும் என் உயிரை கரைக்கிறேன்
என் உயிரே
என் உயிரின் உயிரே....!

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (24-Sep-16, 11:00 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : en uyire
பார்வை : 313

மேலே