என் புருசனுக்கு நான் எமன்டி

ஏன்டி க. கா.வில ஈடுபட்டு உம் புருசனைக் கொன்னுட்டு ஜெயில் தண்டனய அனுபவசிச்சிட்டு இருக்கறயே, ஏன்டி அவர சாகடிச்ச?
@@@@@@
ஏன்டி வசதியான வாழ்க்கை இருந்தாப் போதுமா? என்னோட தேவைகளை நிறைவேற்றாத அவன என்னடி ஆம்பள? அதான் அவனப் போட்டுத்தள்ளிட்டேன். எத்தன காலம் என்ன ஜெயில்ல வச்சிருக்கறப் போறாங்க. என்னோட நன்னடத்தைப் பாத்துட்டு இன்னும் அஞ்சு வருசத்தில வெளில வந்து எங் க. கா....னுக்கு 'சின்னவீடா' சந்தோசமா வாழப்போறேன்டி. அவனும் பிரிஞ்ச துயரத்தில இருக்கறாண்டி. ஒவ்வொரு வாரமும் அழுதுட்டே வந்து பிரியாணி பொட்டலத்தக் குடுத்துட்டு தேம்பித் தேம்பி அழறாண்டி. இது போதுண்டி எனக்கு.
@@@@#
ச்சே.. உன்னப் பாக்க வந்த என்ன எதால அடிச்சுக்கறது?......
@@@@@@@@@@@@@@@@@@
நன்றி :குமரிப்பையன் அவர்கள் மற்றும் நாளிதழ்களில் கூடா நட்பு (கள்ளக் காதல்) கேடாய் முடிந்து கணவனின் உயிரைக் கொடூரமாகப் பறிக்கும் மனைவிமார்களைப் பற்றி வெளியாகும் செய்திகள். க. கா. ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி பற்றியோ குழந்தைகளைப் பற்றியோ மானம் மரியாதை பற்றியோ சிறிதும் கவலைப்படுவதில்லை. திருமண வயதில் பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில்கூட க.கா.பெண்களில் சிலர் தம் கணவன்மார்களை கொலை செய்வதைப் பற்றிய செய்திகளும் வெளியாகின்றன.

எழுதியவர் : மலர் (26-Sep-16, 9:41 am)
பார்வை : 371

மேலே