காதலை தேடி-21

காதலை(லே) தேடி-21
உன் இதழும் என் இதழும்
புது நிமிடங்களை
ருசித்து நிற்க
கரங்கள் பிணைந்து
சொர்க்கம் திறந்து
மாயம் செய்கிறது- நம்
தேகம் இளமைக்குள்
மோக கீதம் இசைக்கிறது.......
போதுமடி இந்த
நிலைக்கொள்ள நிமிடங்களே
எத்திசை நான் சென்றாலும்
ஓடி வருவேன்
உன் ஸ்பரிசம் தீண்ட......
காத்திரு என் கண்ணிமையே
காலமெல்லாம் நான்
உன் காதலின் கண்மணியே.....

"இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம், திடீர்னு வெளி ஊருக்கு போகணும்னு ஆஃபீஸ்ல சொன்னா நீயும் அப்படியே கேட்டுட்டு வந்துடுவியா?? கல்யாணம் ஆகி மூணு மாசம் கூட இன்னும் முழுசா முடியல, எப்போ பாரு வேல வேலைனு நீ ஒரு பக்கம் சுத்து, உன் பொண்டாட்டியும் உன்ன கண்டிக்கற மாதிரி தெரியல, நீ இந்த பக்கம் போனா அவ அந்த பக்கம் எந்த லட்சியமும் இல்லாம வீட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிடறா....புதுசா கல்யாணம் ஆன கலகலப்பு ரெண்டு பேர் முகத்துலயும் சுத்தமா இல்ல....."

அம்மாவின் எந்த கேள்விகளுக்கும் விளக்கம் தரும் மனநிலையில் இப்பொழுது நான் இல்லை, என் மௌன நிலையை அறிந்தவராக மேற்கொண்டு அவர் ஆதங்கத்தை கொட்டஆரம்பித்துவிட்டார்......

"இவ்ளோ பேசறேன் எதாவது பதில் சொல்றானா பாருங்க, இவன் உருகி உருகி விரும்பன பொண்ணு தான சகி, கொஞ்சமாவது அந்த நினைப்பு இருக்கா, அதுவும் இந்த ஒரு வாரமா இவன் அந்த பொண்ணுகிட்ட சரியா கூட பேசல, பாவம் அவ முகம் பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு, அப்படி என்ன மனஸ்தாபமோ, சரி அதுல நாம தலையிட கூடாதுனு ஒதுங்கி நின்னா இப்போ வேல விஷயமா பத்து நாள் வெளிஊருக்கு போறேன்னு வந்து நிக்கறான், இங்க பாரு சாரதி உங்க அப்பாவும் தான் வேலைக்கு போனாரு, சம்பாரிச்சாரு, இப்போ நாமெல்லாம் வசதியா இருக்க அளவுக்கு நிறைய உழைச்சாரு, ஆனா அவர் ஒருநாளும் என்ன இப்படி மனஸ்தாபப்படுத்தினது இல்ல, கணவரா எனக்கு எண்ணலாம் செய்யணுமோ அதெல்லாம் பாத்து பாத்து செஞ்சாரு, ஆனா நீ என்னனா இப்படி பொறுப்பில்லாம நடந்துகிற, என்னமோ சாரதி உன் வாழ்க்கை, உன் இஷ்டம்...நல்லது கெட்டத சொல்லி தர தான் முடியும், கேட்காம போனா உன்ன அடிச்சி திருத்தர வயசு உனக்கும் இல்ல, அடிக்கற அளவுக்கு அநாகரீகமா நாங்களும் இல்ல"

எதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த என்னை அதற்க்கு மேலும் சங்கட படுத்த விரும்பாமல் பெருமூச்சொன்றை வெளித்தள்ளிக்கொண்டு அம்மா அறைக்குள் சென்றுவிட.....

அப்பாவோ என் மனநிலைமையும் புரிந்துகொள்ள முடியாமல் அம்மாவையும் சமாதானம் செய்ய இயலாமல் வெட்டேற்றியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டார்....
என்னவோ சகியிடம் பேசாமல் விலகிப்போவது நான் தான் என்கிற மாதிரி என்னிடம் புலம்பிவிட்டு போன அம்மாவை என்ன சொல்ல, ம்ம்.....அவருக்கு என்ன தெரியும், யார்மனம் கல்லாக கனப்பது , யார் மனம் காதலால் நிலைகொள்ளாமல் தவிப்பது என்று அவருக்கு எப்படி தெரியும்.....

ஊரிலிருந்து வந்தவுடன் முதல் வேலையாக இந்த சகியை சரிகட்டியாக வேண்டும், என்ன முரண்டு பிடித்தாலும் பேசி சமாதானம் செய்து சூழ்நிலையை சரிசெய்தால் தான் எல்லாமும் சரியாகும்......

பாக்கிங்கை பாதியில் விட்டுவிட்டு வந்தது நினைவு வர ரூமுக்கு சென்றால் என் பாக்கிங் வேலையை கர்மசிரத்தையாக செய்துகொண்டிருப்பது வேறு யாருமில்லை என் சகியே தான்.....

இங்க என்ன மனநிலையில் நான் தவிச்சு போய் இருக்கேன், இவ என்னனா ஒண்ணுமே தெரியாத பச்சைப்பிள்ளை மாதிரி இங்க பாக்கிங் பண்ணிட்டு இருக்கா..இவளை இப்போதைக்கு ஒண்ணும் பண்ண முடியாது.....

நான் வந்ததை அறிந்தும் எந்த ரியாக்ஷனும் தராமல் அடுத்த வேலைக்கு அவள் நகர நானும் அவள் மௌனத்தை கலைக்காமல் என் வேலைகளில் பிஸி ஆகிவிட்டேன்......
"அம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க, நான் போகற வழில சாப்டுக்கறேன், மணி அஞ்சு தான்மா ஆகுது, இந்நேரத்துக்கு எப்படி என்னால சாப்பிட முடியும், அதுவும் இப்படி இட்லியை ஒலிம்பிக் பதக்கம் மாதிரி அடிக்கிட்டே போறிங்க, என்னால இதுக்கு மேல சாப்பிட முடியாதும்மா" என்று ஒரு இட்லியை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டே நான் அடம்பிடிக்க அம்மாவின் பாச போராட்டம் அதிகம் ஆகிக்கொண்டே போனது......

"சகி சாம்பார் எடுத்துட்டு வாம்மா"

என்னை வழியனுப்ப மொத்த குடும்பமும்(அம்மா, அப்பா, சகி) எனக்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, எனக்குள்ளே எதோ ஒரு விதமான பெருமை பொங்கி வழிய தொடங்கியது.......

"அம்மா போதும், சகி ரூம்க்கு வா, என்னோட பாக்கிங் நீ தான பண்ண, எல்லாம் கரெக்டா இருக்கானு ஒருமுறை செக் பண்ணிரலாம்" கையை கழுவிக்கொண்டே அவளை பார்த்து கட்டளைபோட அவளும் எனக்கு முன்னாலேயே ரூமுக்கு சென்றுவிட்டாள்.....

நான் ரூமுக்கு செல்ல அவளோ நான் சொன்னபடி பாக்கிங்கை செக் பண்ணிக்கொண்டிருந்தாள்....

"எல்லாமே சரியா இருக்கு, நான் ஏற்கனவே செக் பண்ணிவிட்டேன்" என நான் கூற அப்புறம் எதுக்கு என்ன வர சொன்னிங்க என்கிற மாதிரி ஒரு பார்வையை என் மேல் வீசினாள்......
காரணத்தை சீக்கிரம் புரிந்து கொள்வாய் என் மனையாழினி என்று பார்வையாலே பேசிக்கொண்டு அவள் பக்கத்தில் சென்று சடாரென அவள் இதழை நான் சுவைக்க, முதலில் திணறி, பின் விலக முயற்சி செய்து, பின் என் இதழுக்குள் அடங்கி போனாள் என் அருமை மனைவி......

முதல் நெருக்கம், முதல் சுவாசம், முதல் இறுக்கம், முதல் மயக்கம், முதல் சொர்க்கம் இப்படி பல முதல் அனுபவங்களை அனுபவித்து கொண்டிருந்தோம் எங்களின் இந்த முதல் முத்தத்தில்.......

மெதுமெதுவாக அவள் இடுப்பு வளைவுக்குள் என் கை சரணடைய என் கழுத்து வளவுக்குள் நுழைந்து என் முதுகை அனைத்தது என் சகியின் கரங்கள்......

இப்படியாக எங்களின் இந்த மயக்க நிலை நீண்டுகொண்டே கிறங்கடிக்க ஒரு கட்டத்தில் மூச்சுமுட்டி என் பிடிக்குள்ளிருந்து மீண்டுகொண்டாள் என் சகியானவள்......

எங்களின் இயல்புநிலை திரும்பவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது....அவள் உதட்டை தேய்த்துக்கொள்ள நான் குறுகுறுவென அவளை விழுங்கும் பார்வையை பார்த்து கொண்டு நின்றேன்.....

அதற்க்கு மேலும் அவளால் என் அருகில் நிற்க முடியாமல் கீழே ஓடிவிட்டாள்.....

"அம்மா நான் கிளம்பறேன், பத்து நாள்னு நினைக்காதீங்க, மணிக்கொருமுறை போன் செஞ்சு உங்களோட பேசுவேன், அதனால என்ன பத்தி கவலைப்படாம உங்களை பாத்துக்கோங்க"

"சாரதி ஆல் தி பெஸ்ட் பா"

"தேங்க்ஸ் பா" அப்பாவை கட்டிக்கொண்ட நிமிடம் உள்ளுக்குள் புது தெம்பு பிறந்தது.....

"டேய் சகிகிட்ட சொல்லிட்டு போடா"அம்மா அதட்ட..

"அவகிட்ட எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிட்டேன்மா, என்ன சகி சொல்லிட்டேன் தான", என்று அவள் இதழ்களை ரசித்தபடி என் உதட்டை கடிக்க அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் என் அம்மாவிற்கு தலையசைப்பில் பதில் சொன்னாள்......

முன்பில்லாத ஒரு வினோத முகபாவம் என் சகியின் முகத்தில் தெரிந்தது, அவள் கண்களில் காதலின் தாகம் அவளின் கோபத்தையெல்லாம் தொலைத்து விட்டதை மெய்ப்பித்துக்கொண்டிருக்க நான் கிளம்பும் நேரத்தில் அவளின் ஒற்றை புன்னகை எனக்குள் புது காவியம் படைக்க தொடங்கியது......

எல்லாம் சரி ஆகும் என்று முழுமனதோடு நம்ப துவங்கினேன்.......

எழுதியவர் : இந்திராணி (26-Sep-16, 1:06 pm)
பார்வை : 476

மேலே