எங்கேயவன்
உறக்கத்தில் இருக்கும் அவன் முகம் பார்த்து நான் எழ,
கலக்கத்தில் அவன் என்னை இழுத்து மீண்டும் மஞ்சத்தில் தள்ள,
மயக்கத்தில் அவன் மார்பில் நான் முகம் புதைக்கையில்
என் தலைவருடி உச்சியில் முத்தமிட்டு
காமமில்லா அவன் கண்கள் சொல்லும் கவிதையை
நான் கேட்க வேண்டும்
" எங்கேயவன்"