இன்றனும் நீவருவாய் என

கலைந்து செல்லும் கனவாக
ஒவ்வொரு நாளும்
என்னை நானே
ஏமாற்றிக் கொண்டு
இன்றனும் நீவருவாய் என!
ஒவ்வொரு முறை
என் செல் போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்கிறேன்
அழைப்பது
நீயாக இருக்கும்?
வாகனத்தின் சினுங்கல்
நீயோ என என்னை
இற்கும், இல்லை என
தெரிந்தும் ஓடிவந்து
ஏமாற்றத்தோடு பின் திரும்பும்
என் கால்கள்,
நிமிடங்கள் கடக்கும்
நேரங்கள் நகரும்
இமைகள் கூடாது
வேதனைகள் கூடும்
உனக்குப் புரியுமா ?
எதிர் பார்த்து காத்திருப்பது
எவ்வளவு வேதனைக்கு
உரியது என்று .

எழுதியவர் : vino (1-Oct-16, 2:41 pm)
பார்வை : 2292

மேலே