நேரிசை வெண்பாக்கள்

கொண்டல் முழவதிரக் கூமரை தாளமிட
வண்டல்மண் ணாற்றில் வளம்வருமோ? - கண்பட்டு
விட்டதோ? காய்ந்து வெடித்துத் தரைதெரிய
சுட்டதே நெஞ்சும் துடித்து .

கொண்டல் முழவதிரக் கூமரை தாளமிட
வண்டல்மண் ணாற்றில் வளம்வருமோ? - தண்ணீர்ப்
பெருக்கெடுத்துத் தானாகப் பீறிட்டுப் பாய
வருணனரு ளட்டும் மழை.

கொண்டல் முழவதிரக் கூமரை தாளமிட
வண்டல்மண் ணாற்றில் வளம்வருமோ? - விண்பொழிந்தால்
வெள்ளம் கரைபுரண்டு வேளாண்மை உய்ந்திட
உள்ளமும் பொங்கும் உவந்து.

( குருநாதன் ரமணி ஐயா அவர்கள் முதல் இரண்டடிகள் கொடுக்க ......அவற்றை நேரிசை வெண்பாக்களாக எழுதியது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Oct-16, 7:31 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 88

மேலே