உன்னை இதயத்தில்வைத்து யோசித்தால்........
நின்றுகொண்டு யோசித்தால்,
நிதானமற்றதாகவே தோன்றுகிறது.
அமர்ந்துகொண்டு யோசித்தால்,
அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.
படுத்துக்கொண்டு யோசித்தால்,
படைத்தவன் சதியென்றே தோன்றுகிறது.
நட்பே! (நண்பா!,தோழியே!)
உன்னை இதயத்தில்வைத்து யோசித்தால்,
எல்லாம் இனிமையென்றே தோன்றுகிறது.