நானிலமே மயங்குதடி

நவரசமும் முகங்காட்ட
நளினமுடன் இடையாட
இருவிழியின் பாவனையில்
இமையிரண்டும் உறவாட
காற்சதங்கை யொலிகொஞ்ச
கார்கூந்தல் சேர்ந்தாட
நாயகியாள் நர்த்தனத்தில்
நானிலமே மயங்குதடி !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Oct-16, 2:16 pm)
பார்வை : 60

மேலே